×

‘ஹாரிபாட்டர்’ நடிகர் மரணம்

கிளாஸ்கோ: ‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து நாட்டில் காலமானார். பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரிபாட்டர்’ என்ற புத்தகம் சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் புகழ்பெற்றது. ஹாரிபாட்டர் கதை திரைப்படமாக வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் செய்தது. இந்நிலையில், ஹாரிபாட்டர் திரைப்படத்தில் ஹாக்ரிடாக நடித்த ஸ்காட்டிஷ் நடிகர் ராபி கோல்ட்ரேன் (72) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். ஆனால், தொடர் சிகிச்சை அளித்தும் கூட சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கிளாஸ்கோவிற்கு அருகிலுள்ள ரூதர்க்லனில் அந்தோணி ராபர்ட் மெக்மில்லனில் பிறந்த அவர், ஹாலிவுட் படங்களில் நகைச்சுவை நடிகராகவும், எழுத்தாளராகவும் நிறைய சாதனைகள் புரிந்துள்ளார்.

Tags : 'Harry Potter' actor dies
× RELATED அயோவாவில் பறவைக் காய்ச்சல்: 42 லட்சம் கோழிகள் அழிப்பு